Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

நமது தமிழினத்தையே தலை நிமிர்த்தும் தலைவர்களாக மாணவர்கள் இருக்க வேண்டும். ஞா.ஸ்ரீநேசன்

யுத்தகாலத்தில் கூட கல்வியில் உயந்த நிலையில் இருந்து வந்த நாம் இன்றைய இந்த சமாதானக்காலத்தில் சற்று சரிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றோம். இனரீதியாக இரண்டாம் தரமாக இருந்தாலும் கல்வி ரீதியாக மூன்றாம் தரத்துக்குச்செல்லும் நிலையே இன்று காணப்படுகின்றது. இந் நிலையினை மாணவர்கள் நிவர்த்தி செய்பவர்களாகவும், எதிர்காலத்தில் புதிய கல்விப் புரட்சியை ஏற்படுத்தும் தலைவர்களாகவும் திகழவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் அவர்கள், க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகத்துக்கு தெரிவாக இருக்கும் மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வின் போது தெரிவித்தார்.

மட்டக்களப்பு, கதிரவெளியில் 13.03.2016 இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் மேலும் உரையாற்றுகையில்.. 


ஏனைய சமுகங்களுடன் ஒப்பிடுகையில் எமது சமுகம் இன்னும் வறுமை கோட்டில் இருந்து மீண்டு வரவில்லை. பொருளாதாரத்தில் இன்னும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கின்றோம். இந்த நிலையினை சீரமைக்க நமக்கிருக்கும் ஒரே ஆயுதம் இந்தக்கல்வி ஒன்றுதான். கல்வியால் அடைய முடியாதது ஒன்றுமில்லை. கல்லடி விழிப்புணர்வற்றோர் பாடசாலையில் ஒவ்வொரு வருடமும் பல திறமைசாலிகள் பல்கலைக்கழகம் செல்கிறார்கள். அவர்களை நாம் முன்னுதாரணாமக கொள்ள வேண்டும் விழிப்புலனற்ற அந்த மாணவர்களால் முடியுமாயின் ஏன் எம்மால் முடியாது.? வறுமையை காரணம் காட்டி மாணவர்கள் இடை விலகுவதும், பல்கலைக்கழக வாய்ப்புகளை தவறவிடுவதும் இனி நிறுத்தப்படவேண்டும். அதற்கான முயற்சிகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம். அதன் ஒரு கட்டமாகவே பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகியுள்ள வறிய மாணவர்களுக்கான கொடுப்பனவுகளை வளங்கும் இத்திட்டத்தினை மேற்கொண்டு வருகின்றோம். என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும், தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளருமான கி.துரைராஜசிங்கம் அவர்களும் கலந்து கொண்டார்.



Post a Comment

0 Comments