தேர்தல் தோல்வியை ஒப்புக்கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சர்வதேச ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
தமது பிரதமர் கனவு தகர்க்கப்பட்டு விட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தோல்வியை ஒப்புக்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இன்னமும் முழுமையான தேர்தல் முடிவுகள் வெளியிடப்படாத நிலையில் இவ்வாறு தேர்தல் தோல்வியை மஹிந்த ராஜபக்ச ஒப்புக்கொண்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினரான தாம் நாட்டு மக்களுக்கு சேவையாற்ற உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
15ம் நாடாளுமன்றின் உத்தியோகப்பற்றற்ற தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் ஐக்கிய தேசிய முன்னணி 104 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 82 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
0 Comments