Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

வரலாற்று சிறப்புமிக்க மண்டூர் கந்தசுவாமி ஆலய தீர்த்தோற்சவம்

இலங்கையின் சின்னக்கதிர்காமம் என்றழைக்கப்படும் மட்டக்களப்பு,மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த தீர்த்தோற்சவம் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ நடைபெற்றது.

கடந்த 09ஆம் திகதி போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் என்.வில்வரெட்னம் தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமான ஆலயத்தின் வருடாந்த உற்சவமானது 20 தினங்கள் சிறப்பாக நடைபெற்றுவந்தது.

சூரபத்மனுக்கும் முருகப்பெருமானுக்கும் இடையில் நடைபெற்ற போரின்போது முருகப்பெருமான் ஏவிய வேலில் ஒன்று கதிர்காமத்திலும் மற்றையது மண்டூரிலும் தங்கியதாக கர்ணபரம்பரைக்கதைகள் கூறுகின்றன.

இத்தனை சிறப்புமிக்கதும் பண்டைய தமிழர்களின் வழிபாட்டினைக்கொண்டதுமான மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று காலை நடைபெற்றது.

ஆலயத்தில் இருந்து புட்பக விமானத்தில் வேல்தாங்கிய பேழை ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு மட்டக்களப்பு வாவிக்கரையில் அமைக்கப்பட்டுள்ள சபா மண்டபத்தில் விசேட பூஜைகள் நடைபெற்றன.

அதனைத்தொடர்ந்து பக்தர்கள் புடை சூழ மூடிய நிலையில் தீர்த்தக்கேணிக்கு தங்கவேல் கொண்டுசெல்லப்பட்டு தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் என்.வில்வரெட்னம்தலைமையில் இந்த நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்த தீர்த்தோற்சவத்தில் இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து பல இலட்சம்பேர் கலந்துகொண்டனர்.

அதனைத்தொடர்ந்து ஆலயத்திற்கு ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு அங்கு தெய்வானையம்மன் ஆலயத்திற்கு அருகில் சிறுமிகள் திருவிளக்கு ஆராத்தியெடுத்தநிலையில் அனைத்து சிறுமிகளும் மயங்கிய நிலையில் கொண்டுசெல்லப்பட்டனர்.

இந்த நிகழ்வு காலம்காலமாக இந்த இடத்தில் நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

(வீடியோ காட்சியை பார்வையிட இங்கு அழுத்தவும்)









































Post a Comment

0 Comments