மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லுரியின் விரிவுரையாளர் திருமதி அன்ரனி புஸ்பலதா அவர்கள் "பாடசாலையும் சமூகமும்" எனும் செயற்பாட்டிற்காக மட்டக்களப்பு கன்னங்குடா மகா வித்தியாலயத்துக்கு பயினலுனர் மாணவர்களை அழைத்துச் சென்று நிகழ்வுகளை 29.06.2015 திங்கட் கிழமை நடாத்துவதில் பொறுப்பாகச் செயற்பட்டிருந்தார். அன்றைய தினம் நிகழ்வுகளை நடத்தியதன் பிற்பாடு பி.ப வேளையில் குளிக்கச் சென்றிருந்தார் அதன்போது நெஞ்சுவலி ஏற்பட்டு மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டார் அங்கு சிகிச்சை பலனளிக்காத நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இவரின் பிரிவால் மட்டக்களப்பு கல்வியலாளர்கள் கல்விச் சமூகம் பழைய ஆசிரிய பயிலுனர்கள் பாடசாலை மாணவர்கள் என அனைவரும் கண்கலங்கி நிற்கின்றனர். இவரின் இறுதி நல்லடக்கம் மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லுரியில் இருந்து இரங்கலுரை நடைபெற்றதன் பிற்பாடு எடுத்துச் செல்லப்பட்டு தாழங்குடா இந்து மயானத்தில் நல்லடக்கம் 02.07.2015 பி.ப 5.00 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்வுகளை படங்களில் காணலாம்.














































0 Comments