Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு ஓந்தாச்சிமடம் ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலய வருடாந்த தீமிதிப்பு நிகழ்வு

மட்டக்களப்பு ஓந்தாச்சிமடம் ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் இறுதி நாளான இன்று புதன்கிழமை தீமிதிப்பு இடம்பெற்றது.

மகா மண்டபத்தில் 1000 மடைகள் வைத்து அம்மனுக்கு விசேட பூஜை இடம்பெற்று தேவாதிகள் சகிதம் அடியவர்கள் தீமிதிப்பில் ஈடுபட்ட தங்கள் நேர்கடன்களை நிறைவேற்றினர்.

மஹோற்சவக் கிரியைகள் ஆலய பிரதம குரு விஸ்வப்பிரம்மஸ்ரீ செ; சற்குணராசாக் குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.

நேற்று செவ்வாய்க்கிழமை மாலை (30) சக்தியின் விசேட மகா யாகம் விஸ்வப்பிரம்மம் வை.இ.எஸ். காந்தன் குருக்களினால் நடாத்தப்பட்ட பின்பு நோர்ப்புக்கட்டும் நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.




















Post a Comment

0 Comments