Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு கிரான்குளத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவாளரிடையே கைகலப்பு -மூன்று ஆசிரியர்கள் காயம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான்குளத்தில் நேற்று மாலை நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் கூட்டம் ஒன்றில் இடம்பெற்ற கைகலப்பில் மூவர் காயமடைந்து காத்தான்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை கிரான்குளத்தில் உள்ள கூட்டுறவு சங்க மண்டபத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பிலான கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
ஆரையம்பதி தொடக்கம் கிரான்குளம் வரையான பகுதிகளில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவாளர்கள் இதில் கலந்துகொண்டுள்ளனர்.
இதன்போது குறித்த கூட்டத்தில் வேட்பாளர்களை ஆதரிப்பது தொடர்பில் மூன்று ஆசிரியர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளதுடன் இறுதியில் கைகலப்பாக மாறியுள்ளது.\
இதன்போது மூன்று பேரும் காயமடைந்த நிலையில் காத்தான்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Post a Comment

0 Comments