ஒரு ராஜ கழுகு ஒன்று தனது இரையை தேடி வாஷிங்டன் கடல் பகுதி மேல் பறந்து கொண்டிருந்தது.அப்போது ஒரு காகம் பறந்து கொண்டிருந்த கழுகின் மீது இறங்குவதற்கு முயற்சி செய்து இறங்கியும் நின்றது. இந்த நிகழ்வுக்கு சிறிது நேரத்திற்கு பிறகு இரண்டு பறவைகளும் வெவ்வேறு திசைகளில் பறந்து செல்கின்றன.இந்த அபூர்வ காட்சி அமெச்சூர் புகைப்பட கலைஞர் பூ சான் ( வயது 50) படம் பிடித்து உள்ளார்.

இது குறித்து பூசான் கூறியதாவது:-
ஒரு இரைதேடும் கழுகை படம் பிடிக்க கேமிரா வழியாக பார்த்து கொண்டிருந்தேன்.அப்போது காகம் ஒன்று கழுகின் பின்புறம் பறந்து வந்தது.நான் முதலில் காகம் கழுகை முந்தி பறந்து விடும் என தான் எண்ணினேன்.ஆனால் நடந்ததோ ஆச்சரியப்படும் சம்பவம்.ஆனால் அந்த காகம் தரையில் இறங்குவது போல கழுகின் மேல் பகுதியில் போய் இறங்கியது.ஒரு குறுகிய நேரத்தில் காகம் ஒரு சிறிய இலவச சவாரி செய்தது பார்க்க ஆச்சரியமாக இருந்தது.இந்த எதிர்பாரதா சம்பவத்தால் கழுகிடம் எந்த மாற்றமும் இல்லை. சில நொடிகளில் இரண்டு பறவைகளும் வெவ்வேறு திசைகளில் பறந்து சென்றன.

எனது புகைபடத்தை பார்த்த மக்கள் வியக்கிறார்கள். இந்த காட்சியை எவ்வாறு இவ்வளவு வேகமாக படம் பிடித்தீர்கள் என கேட்கிறார்கள்.நீங்கள் சரியான இடத்தில் சரியான நேரத்தில் இருந்தால் இத்தகைய அபூர்வ படங்களை எடுக்கலாம் என கூறினார்.


0 Comments