Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு இந்து இளைஞர் பேரவையினால் இலுக்குப்பொத்தானையில் அப்பியாச கொப்பிகள் வழங்கிவைப்பு

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை லண்டன் கனக தூர்க்கை ஆலயம் மூலம் பெறப்பட்ட அப்பியாசக் கொப்பிகளை மட்டக்களப்பு இலுக்குப்பொத்தானை மலைமகள் வித்தியாலயத்தில் வைத்து மாணவர்களுக்கு வழங்கி வைத்தது.

பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன், ஏறாவூர்பற்று-2 கோட்டக் கல்வி அதிகாரி எஸ்.சிவகுரு, மற்றும் பேரவை பிரதி நிதிகள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது இலுக்குப்பொத்தானை மலைமகள் வித்தியாலயம், பெருமாவெளி விஸ்ணு வித்தியாலயம், பெரியவட்டவான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ஆகியவற்றில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் அப்பியாசக் கொப்பிகள் என்பன வழங்கி வைக்கப்பட்டது.

இவ் உதவியை வழங்கிய மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை, லண்டன் கனக தூர்க்கை ஆலய நிருவாகத்தினர் ஆகியோருக்கு தமது நன்றிகளை தெரிவிப்பதாக அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் தெரிவித்தனர்.







Post a Comment

0 Comments