Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையின் “சிவானந்தன்” நூல் வெளியீடு


மட்டக்களப்பின் பிரபல பாடசாலையான கல்லடி,உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலையின் “சிவானந்தன்” நூல் வெளியீடு நேற்று பாடசாலையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

பாடசாலையின் அதிபர் மனோராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வித்திணைக்களத்தின் பிரதிக்கல்வி பணிப்பாளர் கலாநிதி சிவநிருத்தானந்தா, ஆன்மீக அதிதியாக மட்டக்களப்பு இராம கிருஸ்ண மிசன் தலைவர் ஸ்ரீமத் சதுர்புஜானந்தாஜி மகராஜ் கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் டாக்டர் அகிலன் கலந்துகொண்டார்.கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு வலய பிரதிக்கல்வி பணிப்பாளர் யுவராஜன்,முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சி.புண்ணியமூர்த்தி உட்பட பாடசாலை அபிவிருத்திசங்க உறுப்பினர்களும் பழைய மாணவர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது பாடசாலையின் ஆக்கங்கள் அடங்கிய ஏழாவது இதழாக வெளிவரும் “சிவானந்தன்” நூல் வெளியீடு சிறப்பாக நடைபெற்றது.
இதனை பாடசாலை அதிபரும் இராம கிருஸ்ண மிசன் தலைவர் ஸ்ரீமத் சதுர்புஜானந்தாஜி மகராஜும் இணைந்து வெளியிட்டு வைத்தனர்.

இந்த நிகழ்வின் நூல் ஏற்புரையினை நூலாசிரியர் என்.செந்தூரன் நிகழ்த்தியதுடன் நூலின் விமர்சன உரையினை கல்லடி,உப்போடை விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலய அதிபர் திருமதி திலகவதி ஹரிதாஸ் நிகழ்த்தினார்.

இதன்போது சிவானந்தா தேசிய பாடசாலை சேன்ஜோன்ஸ் அம்பியுலன்ஸ் பிரிவுக்கு ஆற்றிவரும் பணியை கௌரவிக்கும் வகையில் சேன்ஜோன்ஸ் அம்பியுலன்ஸ் பிரிவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் மீராஸாகீப்பினால் சிவானந்தா தேசிய பாடசாலை அதிபர் நினைவுச்சின்னம் வழங்கியும் கழுத்துப்பட்டி அணிவித்தும் கௌரவிக்கப்பட்டார்.

இதன்போது அதிதிகள் உரையாற்றியதுடன் மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.
























Post a Comment

0 Comments