Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு மாவட்டத்தில் குளிரினால் பெண் உயிரிழப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில்; கடந்த சில தினங்களாக அடை மழை பெய்துவருகின்ற நிலையில், குளிரினால் பெண் ஒருவர் சனிக்கிழமை (20) மாலை  உயிரிழந்துள்ளதாக  அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எஸ்.இன்பராஜன் தெரிவித்தார்.

வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த  ஐய்யாத்துரை வசந்தி (வயது 49) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் அவர் கூறினார். 
குளிரினால் பாதிக்கப்பட்ட இந்தப் பெண், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிகப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் கூறினார். 


இந்தப் பெண் குளிரினால் உயிரிழந்துள்ளமை தொடர்பில்  மட்டக்களப்பு மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ அலுவலகத்துக்கு அறிக்கையிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Post a Comment

0 Comments