ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரியில் இருந்து இவ்வருடம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றி தகைமை பெற்ற 63 மாணவர்களைப் பாராட்டும் நிகழ்வு புதன்கிழமை 03.12.2014 மாலை நடைபெற்றது. ஆரம்ப பிரிவு வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் முதன்மை அதிதியாக திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் சசிதிதேவி ஜலதீபன் பிரதம அதிதியாகவும், திருகோணமலை வலயக் கல்வி அலுவலக உதவிக் கல்வி பணிப்பாளர் இ.நிமலரஞ்சன், கிழக்கு மாகாண கல்வி திணைக்கள் ஆரம்ப கல்வி உதவி கல்வி பணிப்பாளர் பு.உதயகுமார் ஆகியோர் கௌரவ விருந்தினராகவும் கலந்து சிறப்பிததனர்.
இம்மாணவர்களை கற்பித்த ஆசிரியர்களும் பாராட்டப் பெற்றனர்.
கல்லூரி குருளைச்சாரரண் குழுவில் இருந்து இவ்வரடம் திறமையாக செயற்பட்டதுடன் புலமைப்பரிசில் பரீட்சையிலும் தகைமை பெற்ற மாணவர்கள் மூவர் கல்லூரி சாரணர் குழுவினரால் பாராட்டப் பெற்று நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மாணவர்களின் கலை நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டது.
ஆரம்ப பிரிவு உதவி அதிபர் திரு.ந.சங்கரதாஸ் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றது.


0 Comments