Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

புதிய வெட்டுப்புள்ளி- 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் 313 பேர் சித்தி


ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் புதிதாக அறிவிக்கப்பட்ட வெட்டுப் புள்ளிக்கமைய மட்டக்களப்பு கல்வி வலையத்திற்குட்பட்ட மண்முனை வடக்கு கோட்டத்தில் 313 பேர் சித்தியடைந்து மாவட்டத்திற்கும் மற்றும் கோட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளதாக கோட்டக்க கல்விப் பணிப்பாளர் அ. சுகுமாரன் தெரிவித்தார்.
2014 ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்டங்களின் வெட்டுப்புள்ளிகள் குறைத்ததிற்கிணங்க 158ஆக இருந்த மாவட்ட வெட்டுப்புள்ளி 150 ஆக குறைக்கப்பட்டதற்கமைய இவ் அதிகரிப்பு ஏற்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட 2015 ஆம் ஆண்டின் வரவு செலவு திட்டத்திற்கிணங்க 25,000 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்தின்கீழ் புதிய வெட்டுப்புள்ளி மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 150 ஆகக் குறைக்கப்பட்டுள்ளதற்கிணங்க இவ் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வெட்டுப்புள்ளி 158 ஆக அறிவிக்கப்பட்ட நிலையில் 211 மாணவர்கள் சித்தி பெற்றிருந்தனர். புதிய வெட்டுப் புள்ளியினால் 100க்கும் மேற்பட்டோர் சித்தியடைந்துள்ளனர்.
இதன் படி, புனித மிக்கேல் கல்லூரி 72, புனித சிசிலியா பெண்கள் பாடசாலை 43, கோட்டைமுனை கனிஸ்ட வித்தியாலயம் 43, வின்சன்ற் மகளிர் தேசியப்பாடசாலை 42, சிவானந்தா தேசியப்பாடசாலை 25, விவேகானந்தா மகளிர் வித்தியாலயம் 19, மெதடிஸ்த மத்திய கல்லூரி 19, இந்துக்கல்லூரி 16, மகாஜனாக் கல்லூரி 12 பேரும் சித்தியடைந்துள்ளனர்.
அத்துடன், புளியடிமுனை அ.த.க. வித்தியாலயம், கல்லடி முகத்துவாரம் விபுலானந்தா வித்தியலயம் ஆகியவற்றில் 3பேர், நாவற்கேணி ஸ்ரீ கண்ணகி வித்தியலயம், கருவேப்பங்கேணி விபுலானந்தா வித்தியலயம், யோசப் வாஸ் வித்தியாலயம், ஆனைப்பந்தி மகளிர் கல்லூரி, கல்லடி வேலூர் சக்தி வித்தியலயம் ஆகியவற்றில் தலா இருவரும், மட்ட பாலமீன்மடு விக்னேஸ்வரா வித்தியலயம், அமிர்தகழி சித்திவிநாயகர் வித்தியலயம், ஊறணி சரஸ்வதி வித்தியலயம், புனித செபஸ்ரியான் தமிழ் வித்தியாலயம், புதூர் விக்னேஸ்வரா வித்தியலயம் ஆகியவற்றில் ஒவ்வொருவரும் சித்தியடைந்துள்ளனர்.

Post a Comment

0 Comments