மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதா தேவாலயத்தின் வருடாந்த திருவிழா கடந்த 24.01.2014 வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்ப மானது.
நவ நாள் காலங்களில் ஜெப வழிபாடுகள், நற்கருணை ஆராதனைகள், திருப்பலிகள் ஒப்பு கொடுக்கப்பட்டது.அதனை தொடர்ந்து 01.02.2014 சனிக்கிழமை மாலை அன்னையின் திருச்சுருவம் பவானியாக வீதி வலம் வந்து ஆலயத்தில் நற்கருணை வழிபாடு திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டது.
திருவிழா திருப்பலி 02.02.2014 காலி 06.45 மணிக்கு ஆயர் பொன்னையா ஜோசெப் ஆண்டகை தலமையில் ஒப்புகொடுக்கப்பட்டதுடன், மாணவர்களுக்கு தேவ நற்கருணை, உறுதி பூசுதல் ஆகிய அருட் சாதனங்கள் ஆயரினால் வழங்கப்பட்டது. இறுதியாக அன்னையின் திருச் சுருபம் ஆலயத்தை சுற்றி எடுத்து வரப்பட்டு, ஆலய கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவு பெற்றது. ஞாயிற்றுக்கிழமை(02.02.2014) நிறைவுபெற்றது. சனிக்கிழமை மாலை திருச்சொரூப பவனி நடைபெற்றதுடன் இந்த திருச்சொரூப பவனியில் பெருமளவானோர் கலந்துகொண்டனர். ஞாயிற்றுக்கிழமை காலை திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
தாண்டவன்வெளி பங்குத்தந்தை அருட்தந்தை அன்னதாஸ் அடிகளார் தலைமையில் காலை 06.45 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் அருட்கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகை கலந்துகொண்டு திருவிழா கூட்டுத்திருப்பலியை ஒப்புக்கொடுத்தார்.இதன்போது ஆயர் உட்பட திருவிழா கூட்டுத் திருப்பலியில் கலந்துகொண்ட அருட்தந்தையர்களினால் கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து திருச்சொருபம் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு ஆலய முன்றிலில் ஏற்றப்பட்டிருந்த கொடி பக்திபூர்வமாக இறக்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான அடியார்கள் கலந்துகொண்டதுடன் மட்டக்களப்பு பொலிஸாரினால் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. இதனைத்தொடர்ந்து சுதந்திரன் விளையாட்டுக்கழகத்தினால் பல்வேறு விளையாட்டு நிகழ்வுகளும் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தன. மாலையிலும் பல்வேறு விளையாட்டு நிகழ்வுகளும் நடை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும் .


0 Comments